close
Choose your channels

பாலியல் வன்முறைக்கு அரபு நாட்டு பாணி தண்டனை தேவை. தன்ஷிகா

Friday, March 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படம் உள்பட பல படங்களில் நடித்துள்ள நடிகை தன்ஷிகா நடித்த படம் 'விழித்திரு'. இந்த படத்தில் கிருஷ்ணா, வித்தார்த். வெங்கட் பிரபு ஆகிய மூன்று நாயகர்கள் நடித்துள்ளனர். 'அவள் பெயர் தமிழரசி' படத்தை இயக்கிய மீரா கதிரவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் பிரஸ்மீட் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை தன்ஷிகா சமீபகாலமாக பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்து கூறியபோது, 'காத்தாடி என்ற படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்றபோது ஒருசிலர் குடித்துவிட்டு தகராறு செய்ததாகவும், தான் கற்று வைத்திருந்த சிலம்பம் அப்போது கைகொடுத்ததாகவும், சிலம்பத்தை உபயோகித்து குடிகாரர்களை விரட்டியடித்து, படக்குழுவினர்களை தான் காப்பாற்றியதாகவும் தெரிவித்தார்.
எனவே பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு தற்காப்பு கலையை பயின்று வைத்து கொள்வது அவசியம் என்று கூறிய தன்ஷிகா, அதே நேரத்தில் பாலியல் குற்றங்களுக்கு அரபு நாடுகள் பாணியில் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். அரபு நாடுகளில் பாலியல் குற்றங்களுக்கு மரணதண்டனை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.