close
Choose your channels

ஸ்ட்ராங் கேர்ள்: சமந்தாவின் வேற லெவல் வொர்க்-அவுட் புகைப்படத்திற்கு பிரபல நடிகை கமெண்ட்..!

Monday, March 20, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சமந்தா வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் ஸ்ட்ராங் கேர்ள் என பிரபல நடிகை ஒருவர் இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் செய்து உள்ளார்.

நடிகை சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்தார் என்பதும் தற்போது அந்த நோயிலிருந்து அவர் முழுமையாக விடுபட்டு மீண்டும் உடற்பயிற்சி செய்து தனது உடலை ஃபிட்டாக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே. அவ்வப்போது சமந்தா தனது சமூக வலைதளத்தில் கடுமையான உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அதை ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் வேற லெவலில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஸ்ட்ராங் கேர்ள் என பிரபல நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் கமெண்ட் செய்துள்ளார். அவர் மட்டுமின்றி வேறு சில நடிகைகளும் இந்த புகைப்படத்திற்கு தங்களது கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமந்தா நடித்த ‘சாகுந்தலம்’ என்ற திரைப்படம் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை சமந்தா கவனித்து வருகிறார் என்பதும் அவரே நேரடியாக இந்த படத்தை புரமோஷன் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.