close
Choose your channels

சினேகாவை அலேக்காக தூக்கி கொஞ்சும் பிரசன்னா: க்யூட் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்!

Friday, April 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சினேகாவை அவரது கணவர் பிரசன்னா அலேக்காக தூக்கி கொஞ்சும் க்யூட் புகைப்படங்கள் சினேகாவின் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

நேற்று உலகம் முழுவதும் தமிழர்கள் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நிலையில் தமிழ் திரையுலக பிரபலங்களும் குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வந்தன.

அந்த வகையில் நடிகை சினேகா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூகதளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் சினேகாவை அப்படியே அலேக்காக பிரசன்னா தூக்கிக் கொஞ்சும் க்யூட் புகைப்படமும் உள்ளது என்பதும், இந்த புகைப்படங்களுக்கு ஏராளமானோர் லைக்ஸ் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தாண்டை சந்தோஷமாக கொண்டாடும் சினேகா - பிரசன்னா குடும்பத்தினர் தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.