close
Choose your channels

'அதுக்குள்ள முடிஞ்சிருச்சா?: 'தளபதி 66' படம் குறித்த மாஸ் தகவல்!

Friday, April 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ மடத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கிய முதற்கட்ட படப்பிடிப்பில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது என்றும், இந்த பாடல் காட்சியில் விஜய் ,ராஷ்மிகா மந்தனா நடித்ததாகவும், தற்போது இந்த பாடலின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

’தளபதி 66’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறும் என்றும் இதற்காக பிரம்மாண்டமான செட் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் உள்ளிட்டோர் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

இந்த படத்தில் விஜய்யின் தந்தையாக சரத்குமார் நடித்து வருவதாகவும் விஜய்யின் இரண்டு சகோதரர்களாக நடிக்க பிரபல நடிகர்களை தேர்வு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமன் இசை அமைப்பில், வம்சி இயக்கத்தில், தில்ராஜூ தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.