close
Choose your channels

தனது பெயரை பச்சை குத்திய ரசிகரிடம் சன்னிலியோன் என்ன சொன்னார் தெரியுமா? வைரல் வீடியோ

Thursday, March 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனது பெயரை பச்சை குத்திய ரசிகரிடம் சன்னி லியோன் கூறிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக சதீஷ் நடித்து வரும் ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் சன்னி லியோன் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் சன்னிலியோனை படப்பிடிப்பின் இடையே ரசிகர் ஒருவர் சந்தித்து அவரது பெயரை கையில் டாட்டூ குத்தி இருந்ததை காண்பித்தார். இதனை பார்த்து ஆச்சரியமடைந்த சன்னிலியோன், ‘நீங்கள் என்னை எப்போதும் விரும்புவீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன், தவிர உங்களுக்கு வேறு வழி இல்லை, நீங்கள் உங்கள் வருங்கால மனைவியை விரைவில் கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.