close
Choose your channels

உலகின் 8 நகரங்களில் 'அரபிக்குத்து' பாடலுக்கு நடனமாடிய நடிகை: வைரல் வீடியோ

Saturday, March 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘அரபிக்குத்து’ பாடலுக்கு உலகின் 8 நகரங்களில் நடனமாடிய வீடியோவை நடிகை ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ‘அரபிக்குத்து’ பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பதும், இந்த பாடலுக்கு திரையுலக பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உள்பட பலர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிரபல மலையாள நடிகை லிண்டுரோனி என்பவர் ‘அரபிக்குத்து’ பாடலுக்கு இத்தாலியின் சவோனா, ரோம், மார்ஷெல்லி, பிரான்ஸ் நாட்டின் பார்சிலேனோ, சுவிட்சர்லாந்தின் மிலன், பலேரோமா உள்பட 8 நகரங்களில் நடனமாடிய வீடியோவை பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.