close
Choose your channels

திடீரென வெளிநாட்டிற்கு பறக்கும் அதிதி ஷங்கர் .. காரணம் இதுதான்..!

Saturday, July 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அதிதி ஷங்கர் தான் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்காக வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர், கார்த்தி நடித்த ’விருமன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் அவருடைய நடிப்பு பெரிதாக பேசப்பட்ட நிலையில் தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ’மாவீரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இம்மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அதிதி ஷங்கரின் அடுத்த படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கி வருவதாகவும் இந்த படத்தில் நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷ் முரளி நாயகனாக நடித்து வருவதாக கூறப்பட்டது

இந்த படத்தின் முதல் கட்டப்பட படிப்பு சென்னையில் நடந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக விஷ்ணுவர்தன், அதிதி ஷங்கர், ஆகாஷ் முரளி உட்பட படக்குழுவினர் வெளிநாட்டிற்கு செல்ல இருப்பதாகவும், இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.