close
Choose your channels

'லியோ'வுக்கு முன்னர்  ரிலீஸ் ஆகும் த்ரிஷாவின் படம்.. புரமோஷன் பணிகள் தொடக்கம்..!

Saturday, July 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் உடன் த்ரிஷா நடித்த ’லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு முன்பே த்ரிஷா நடித்த ’தி ரோடு’ என்ற திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

’தி ரோடு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பான போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரையிடப்படும் என்றும் சரியான ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் புரமோஷன் பணியை இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை படக்குழுவினர் போட்டு பார்த்தபோது த்ரிஷாவின் நடிப்பு அபாரமாக இருந்ததாகவும் அவரது நடிப்பை அனைவரும் பாராட்டியதாகவும் த்ரிஷாவுக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

த்ரிஷா முக்கிய வேடத்தில் நடிக்கும் ’தி ரோடு’ படத்தில் டான்சிங் ரோஸ் ஷபீர், சந்தோஷ் பிரதாப், சபீர், மியா ஜார்ஜ், எம்எஸ் பாஸ்கர், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி, லட்சுமி பிரியா, உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சிஎஸ் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு கேஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவும், ஏ.ஆர்.சிவராஜ் படத்தொகுப்பு பணியை செய்து வருகின்றனர். இந்த படத்தை

மதுரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அருண் வசீகரன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.