close
Choose your channels

மு.க.ஸ்டாலினுடன் கருணாஸ் திடீர் சந்திப்பு

Friday, June 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுகவின் கூட்டணி கட்சி எம்.எல்.ஏவான கருணாஸ் உள்பட 3 எம்.எல்.ஏக்கள் சற்று முன்னர் திடீரென எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவின் தினகரன் அணியின் ஆதரவாளரான கருணாஸ், தமீமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் நேற்று திடீரென டிடிவி தினகரனை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து ஆலோசனை செய்தனர். இந்த நிலையில் சற்று முன்னர் டிடிவி தினகரன் அணி, பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு ஆதரவு என்று அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சற்றுமுன்னர் கருணாஸ், தமீமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளனர். ராஜிவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் பரோல் குறித்த விவாதத்திற்கு சட்டப்பேரவையில் ஆதரவு தருமாறு மூவரும் ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கவே இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.