close
Choose your channels

அஜித்தை அடுத்து பிரபல நடிகரின் படத்தில் அக்சராஹாசன்

Monday, April 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சீயான் விக்ரம் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தை 'தூங்காவனம்' இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கவுள்ளார் என்ற செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அக்சராஹாசன் நடிக்கவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இந்த செய்தி உறுதிசெய்யப்பட்டால் அக்சராஹாசன் நடிக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அக்சரா, அஜித்தின் 'விவேகம்' படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கோலிவுட் திரையுலகின் ஸ்டிரைக் முடிந்தவுடன் தொடங்கும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.