close
Choose your channels

'பீஸ்ட்', 'கேஜிஎஃப் 2' படங்களை அடுத்து இந்த வாரம் ரிலீஸாகும் 3 படங்கள்!

Sunday, April 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த இரண்டு வாரங்களாக 'பீஸ்ட்’ மற்றும் ‘கேஜிஎஃப் 2’ திரைப்படங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் ஆக்கிரமித்துள்ள நிலையில் இந்த வாரம் 3 புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் எந்த படத்திற்கு ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதியும், யாஷ் நடித்த ‘கேஜிஎஃப் 2’ திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதியும் வெளியானது. தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் இந்த இரண்டு படங்கள் ஆக்கிரமித்துக் கொண்ட நிலையில் கடந்த வாரம் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை.

இந்த நிலையில் ஏப்ரல் 28ஆம் தேதி 3 தமிழ் திரைப்படம் வெளியாகவுள்ளது. முதலாவதாக விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ரசிகர்கள் இந்த படத்திற்கு முதல் முக்கியத்துவம் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கர் நடித்த ’ஹாஸ்டல்’ திரைப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. த்ரில் மற்றும் காமெடி கதையம்சம் கொண்ட இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெறும். மூன்றாவதாக சந்தோஷ் பிரதாப் நடித்த ’கதிர்’ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் குழுவினரும் நல்ல புரமோஷன் செய்திருப்பதால் இந்த படமும் ஓரளவுக்கு ரசிகர்களின் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் தேஜா நடித்த ’ஆச்சாரியா’ என்ற தெலுங்கு திரைப்படமும், ஜனகணமன என்ற மலையாளத திரைப்படம் வெளியாகவுள்ளன. மேலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அஜய்தேவ்கான், அமிதாப்பச்சன் நடித்த ’ரன்வே 34’ மற்றும் டைகர் ஷெராஃப் நடித்த ’ஹீரோபாண்டி 2’ ஆகிய படங்களும் வெளியாக உள்ளது.

மேலும் மே 1ஆம் தேதி மம்முட்டி நடித்த ‘சிபிஐ 5’ என்ற திரைப்படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.