close
Choose your channels

தோளை சிலுப்பி க்யூட்டா நடனம் ஆடிய தல தோனி… வைரலாகும் வீடியோ!

Sunday, April 24, 2022 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனும் ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரருமான தல தோனி சக வீரரின் திருமணத்தில் வேட்டி அணிந்து, நடனம் ஆடிய காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நியூசிலாந்து அணியின் முன்னணி வீரரும், விக்கெட் கீப்பருமான டிவோன் கான்வை சென்னை சிஎஸ்கே அணி ஐபிஎல் போட்டிகளுக்காக ஏலத்தில் எடுத்துள்ளது. சிறந்த ஓப்பனரான இவர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 15 ஆவது சீசன் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிராகக் களம் இறங்கி வெறும் 3 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அதற்குப் பிறகு தனது திருமண நிகழ்வுக்காக பயோபபுள் முறையில் இருந்து வெளியேறினார்.

மேலும் டிவோன் தமிழகத்தைச் சேர்ந்த தனது காதலி கிம் வாட்சனை கரம் பிடிக்க இருக்கிறார். இந்தத் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து டிவோன் சிஎஸ்கே வீரர்களுக்கு சென்னையில் பார்டி ஒன்றையும் அளித்திருந்தார். இந்த நிகழ்வில் அணியின் மூத்த வீரரான தல தோனி பட்டு வேட்டி மற்றும் மஞ்சள் நிற ஆடையில் கலந்துகொண்டார். இவருடன் சிஎஸ்கே அணியின் பிராவோ மற்றும் பிற வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்வின்போது நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “காத்துவாக்குல ரெண்டு காதல்“ திரைப்படத்தில் இடம்பெற்ற “டூ டூடூ டூ டூடு“ பாடலுக்காக தல தோனி, தனது தோளை சிலுப்பிக்கொண்டு அழகாக நடனம் ஆடியிருந்தார். கூடவே சக வீரர்கள் பலரும் வேட்டி சட்டையில் கலக்கலாக நடனம் ஆடியிருந்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தது.

இதைத் தொடர்ந்து தற்போது “டூ டூடூ“ பாடலுக்கு தோனி மற்றும் சிஎஸ்கே வீரர்கள் நடனம் ஆடிய வீடியோவை சிஎஸ்கே அணி தனது அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.