close
Choose your channels

கமல், உதயநிதி படங்களை அடுத்து சிம்பு படத்திலும் இணைந்த பிரபல நடிகர்!

Friday, March 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல மலையாள மலையாள நடிகர் ஒருவர் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன் நடித்து முடித்துள்ள ’விக்ரம்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள மலையாள நடிகர் பகத் பாசில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கவுள்ள படத்திலும் நடிக்க உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படமான ‘கொரோனா குமார்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோகுல் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் நாயகியாக அதிதிஷங்கர் நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது பகத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இணைந்துள்ளதாக கூறப்படுவது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஏற்கனவே அல்லு அர்ஜூனின் ’புஷ்பா’ திரைப்படத்தில் அட்டகாசமான ஒரு கேரக்டரில் நடித்த பகத் பாசில், அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் தமிழ் திரையுலகிலும் முன்னணி நடிகர்களின் படங்களிலும் அவர் இணைந்து உள்ளதால் தென்னிந்திய நட்சத்திரமாக அவர் மாறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.