close
Choose your channels

'அசுரன்' படக்குழுவினர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

Saturday, October 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிய ’அசுரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் பயனாளிகளின் பாராட்டுகளைப் பெற்றது.

இந்தப் படம் கடந்த இரண்டு வாரங்களாக அனைத்து திரையரங்குகளிலும் பார்வையாளர்களால் நிரம்பி வழிவதால் வசூல் மழை பொழிந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் தனுஷ் மற்றும் மஞ்சுவாரியர் ஆகியோர்களின் அசுரத்தனமான நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்படுவதால் இருவருக்கும் தேசிய விருது கிடைக்கும் என்றும் பலர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் ’அசுரன்’ படத்தைப் பார்த்து தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர்களுக்கு தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து நேற்று இரவு உலக நாயகன் கமலஹாசன் ’அசுரன்’ திரைப்படத்தை பார்த்தார். அவருடன் அவருடைய மகள் சுருதிஹாசன் மற்றும் அசுரன் பட நாயகி மஞ்சுவாரியர் இந்த படத்தை பார்த்தனர்.

படம் பார்த்து முடித்தவுடன் மஞ்சு வாரியரை நேரில் பாராட்டிய கமல்ஹாசன், அதன்பின் தனுஷ் லண்டனில் இருக்கும் தனுஷூக்கு போன் செய்து தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் இதே போன்று பல படங்களில் நடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அதேபோல் இயக்குனர் வெற்றிமாறனுக்கும் தொலைபேசி மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் உலகநாயகனின் இருந்து பெற்ற பாராட்டால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.