close
Choose your channels

சிவகார்த்திகேயனை அடுத்து ரஜினியை சந்தித்த 'டான்' பிரபலம்!

Monday, May 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படம் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் இன்று காலை கார்த்திகேயன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தார். இந்திய திரையுலகின் ‘டான்’ அவர்களை சந்தித்தது மிகப் பெரிய மகிழ்ச்சி என்று அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுடன் ‘டான்’ பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து உள்ளார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ரஜினியுடன் இணைந்த புகைப்படத்தை சிபிசக்கரவர்த்தி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தோம். ‘டான்’ மற்றும் சினிமா பற்றி ஒரு மணி நேரம் அவரிடம் உரையாடியதை ஆசீர்வதிக்கப்பட்டது போல் நான் உணர்ந்தேன்.

அவரது இருப்பிடமே ஒரு தெய்வீகமானது. அவருடைய வார்த்தைகளும் தெய்வீக வார்த்தைகள் நாங்கள். அவருடைய பேச்சைக் கேட்டு மேக மூட்டத்தில் மிதந்தது போல் இருந்தோம்.

என்ன ஒரு திரைப்படம்! என்ன ஒரு உணர்வு! என்று அவர் ‘டான்’ பற்றி சொல்லிக் கொண்டிருந்தபோது அவரை நாங்கள் ’என்ன ஒரு மனிதன்’ என்று ஆச்சரியமாய் பார்த்தோம், லவ் யூ தலைவா’ என்று சிபிச்சக்கரவர்த்தி பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.