close
Choose your channels

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த பிரபல நடிகர்: அதிரடி அறிவிப்பு

Tuesday, September 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

தனுஷ் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்க உள்ளார் என்பதும் மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் சந்தீப் கிஷான் மற்றும் நிவேதிதா சதீஷ் நடிக்க இருப்பதாக வெளிவந்த அறிவிப்பை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் இந்தப் படத்தில் ஜான் கொகேன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படத்தில் வேம்புலி என்ற கேரக்டரில் அற்புதமாக நடித்து இருந்தார் என்பதும் அதுமட்டுமின்றி தற்போது அஜித் நடித்து வரும் 'ஏகே 61’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் ஜான் கொகேன் இணைந்து இருப்பது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.