close
Choose your channels

அந்த படத்தில் நான் நடித்திருந்தால் ராஷ்மிகாவை விட நன்றாக நடித்திருப்பேன்: ஐஸ்வர்யா ராஜேஷ்

Wednesday, May 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்த சூப்பர் ஹிட் படத்தில் அவரது கேரக்டரில் நான் நடித்திருந்தால் அவரைவிட நன்றாக நடித்திருப்பேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’ஃபர்ஹானா’ திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தை புரமோஷன் செய்யும் போது அவர் பேசிய போது ’தெலுங்கு திரை உலகம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று விஜய் தேவரகொண்டாவுடன் தான் நடித்த ’வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ என்ற படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்று கூறினார். மீண்டும் ஒரு நல்ல கேரக்டரில் தெலுங்கு படத்தில் நடிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக ’புஷ்பா’ திரைப்படத்தில் ஸ்ரீ வள்ளி என்ற கேரக்டரில் ராஷ்மிகா மந்தனா நன்றாக நடித்திருந்தாலும் அந்த கேரக்டரில் நான் நடித்திருந்தால் அவரைவிட நன்றாக நடித்திருப்பேன் என நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த பேட்டிக்கு ராஷ்மிகா மந்தனா என்ன பதில் அளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.