close
Choose your channels

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - ராகவா லாரன்ஸ் சந்திப்பில் இதுவும் நடந்ததா? ரசிகர்கள் ஆச்சர்யம்

Tuesday, March 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் ஒரு மியூசிக் ஆல்பத்தை இயக்கியுள்ளார் என்பதும் இந்த மியூசிக் ஆல்பத்தை நேற்று நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸிடம் காண்பித்த்தாகவும் செய்திகள் வெளியானது. இந்த தகவலை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் என்றும் இது குறித்த புகைப்படம் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த சந்திப்பில் மேலும் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் அன்பறிவ் இயக்கத்தில் உருவாக இருந்த ’துர்கா’ என்ற படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஆனால் ’துர்கா’ படத்திலிருந்து அன்பறிவ் விலகி விட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ’துர்கா’ படத்தை தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்தை இயக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை தான் நேற்றைய சந்திப்பில் நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் அடுத்த படம் ’துர்கா’ படமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.