close
Choose your channels

இந்த ஆண்டின் கடைசி வொர்க் -அவுட்: ஐஸ்வர்யா ரஜினியின் வேற லெவல் வீடியோ!

Saturday, December 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2022ஆம் ஆண்டு இன்றுடன் விடைபெறும் நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த ஆண்டின் கடைசி வொர்க் - அவுட் என பதிவு செய்துள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரைவில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஐஸ்வர்யா ரஜினிகாந்தை வெளியிடுவார் என்பதும் அவை மிகப் பெரிய அளவில் வைரலாகி வரும் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் சற்று முன்னர் அவர் இந்த ஆண்டின் கடைசி வொர்க் அவுட் வீடியோ என பதிவு செய்துள்ள வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் டீன்ஏஜ் பெண்களுக்கு இணையாக மிகவும் கடினமான உடற்பயிற்சிகளை செய்யும் காட்சிகள் இடம்பெற்று உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.