close
Choose your channels

'அஜித் 61' கெட்டப் இதுதான்: அஜித் மேனேஜரின் டுவிட் வைரல்

Tuesday, February 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்துள்ள ’வலிமை’ திரைப்படம் வரும் 24-ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் அவரது அடுத்த திரைப்படமான ’அஜித் 61’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இந்த படத்திற்காக சென்னை அண்ணாசாலை போன்ற பிரம்மாண்டமான செட் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் போடப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானதை பார்த்தோம் .

இந்த நிலையில் சற்று முன்னர் அஜீத்தின் மேனேஜர் தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித் 61’ படத்தில் அஜீத்தின் கெட்டப் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். நீண்ட தாடியுடன் கருப்பு கண்ணாடியுடன் அட்டகாசமாக உள்ள அஜித்தின் இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்த படம் ஒரு முக்கிய சமூக பிரச்சனைகளை அலசும் படமாக இருக்கும் என்றும் ’நேர்கொண்ட பார்வை’ படம் போல நீண்ட உரையாடல்கள் இருக்கும் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.