close
Choose your channels

'அஜித் 57' படத்தின் முக்கிய பணி முடிந்தது

Friday, October 14, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்து வரும் 'அஜித் 57' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்தது என்பதையும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.,
இந்நிலையில் இந்த படத்தின் பாடல்களை கடந்த சில நாட்களாக கம்போஸ் செய்து வந்த இசையமைப்பாளர் அனிருத், இந்த படத்திற்கு தேவையான அனனத்து பாடல்களையும் கம்போஸ் செய்து முடித்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அஜித்தின் முந்தைய படமான 'வேதாளம்' போலவே இந்த படத்திலும் அனிருத் அதிரடி பாடல்களை கம்போஸ் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 'வீரம்' சிவா இயக்கி வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளிவரவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.