close
Choose your channels

மனைவியின் நிறை மாத கர்ப்பத்தை பார்ட்டி வைத்து கொண்டாடிய 'துணிவு' பட நடிகர்..!

Sunday, April 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவரின் மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணி ஆக இருக்கும் நிலையில் அதை கொண்டாடும் வகையில் பார்ட்டி வைத்துள்ளார். இந்த பார்ட்டி குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

அஜீத் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவான ’துணிவு’ திரைப்படத்தில் வங்கியின் உரிமையாளராக நடித்தவர் ஜான் கோகைன் என்பதும் இவர் ஏற்கனவே பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’சார்பாட்டா பரம்பரை’ என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகர் ஜான் கோகைன் மனைவி பூஜா ராமச்சந்திரன் சமீபத்தில் கர்ப்பமான நிலையில் கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருவார் என்பதும் குறிப்பாக கர்ப்ப நேரத்தில் பிகினி உடையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் மனைவியின் நிறை மாதத்தை கொண்டாடும் வகையில் நடிகர் ஜான் கோகைன் பார்ட்டி வைத்துள்ளார். இந்த பார்ட்டியில் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்ட நிலையில் இது குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.