close
Choose your channels

அஜித்தின் 'வலிமை' படத்தின் இறுதிக்கட்ட வசூல் இதுதான்: தமிழகத்தில் சாதனை!

Monday, April 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்திற்கு ஏராளமான விமர்சகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை தந்த போதிலும் அந்த திரைப்படம் வசூலில் சாதனை செய்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

பிப்ரவரி 24ஆம் தேதி வெளியான அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் 200 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக போனிகபூர் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்தார் என்று ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம் இந்தியாவில் மட்டும் 119 கோடி வசூல் செய்துள்ளதாகவும் இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் 115 கோடி வசூல் செய்ததாகவும் மொத்தத்தில் இந்த திரைப்படம் 234 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்பதாவது இடத்தை ‘வலிமை’ பிடித்துள்ளது என்பது என்பது குறிப்பிடத்தக்கது. விஸ்வாசம் திரைப்படத்தின் வசூலை அடுத்து ‘வலிமை’ திரைப்படமும் அஜித்துக்கு வசூல் அளவில் வெற்றிப்படமாக திரைப்படம் உள்ளது என்பது இந்த வசூல் நிலவரங்கள் இருந்து தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.