close
Choose your channels

ரஜினியால் ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டதா 'தல 57' படப்பிடிப்பு?

Friday, September 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 57 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் முடிந்த நிலையில் அடுத்த வாரம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபத்தில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் முதலில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் உள்ள ஒரு தனியார் பிலிம் சிட்டியில் நடத்த சிறுத்தை சிவா முடிவு செய்திருந்தார். ஆனால் அதே தேதிகளில் ரஜினியின் '2.0' படத்தின் படப்பிடிப்பு அங்கு நடக்கவிருப்பதை கேள்விப்பட்ட அஜித், ஒரே இடத்தில் இருவரது படப்பிடிப்பும் நடந்தால் இருவரின் பிரைவசியும் பாதிக்கும் என்றும், அதனால் படப்பிடிப்பு தளத்தை மாற்ற வேண்டும் என்று இயக்குனரிடம் கோரிக்கை வைத்ததாகவும் இதன் காரணமாகத்தான் இந்த படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அஜித்துடன் காஜல் அகர்வால், அக்சராஹாசன், கருணாகரன், தம்பி ராமையா, அப்புக்குட்டி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.