close
Choose your channels

அசத்தலான அஜித்தின் குடும்ப புகைப்படங்கள்: 'அஜித் 61' படத்தின் மாஸ் கெட்டப்!

Thursday, March 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜீத் சமீபத்தில் தனது குடும்பத்துடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் கடந்த மாதம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகிய நிலையில் இந்த படம் 150 கோடியை தாண்டி வசூல் குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ‘அஜித் 61’ என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்திற்காக சென்னை அண்ணாசாலை செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ’அஜித் 61’ படத்தின் கெட்டப்பை போனிகபூர் சமீபத்தில் வெளியிட்டு இருந்தார் என்பதும் அஜித் நீண்ட தாடியுடன் வில்லன் கெட்டப்பில் காட்சியளித்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இதே கெட்டப்பில் அஜித் தற்போது தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் ஹோட்டல் ஒன்றுக்கு சென்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. அஜித்தின் மகன் ஆத்விக் பிறந்தநாளை முன்னிட்டு தனது குடும்பத்துடன் அஜித் ஹோட்டலுக்கு சென்றதாகவும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்றும் கூறப்படுகிறது. அஜித்தின் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோர் இந்த புகைப்படங்களில் இருக்கும் நிலையில் இந்தப் படங்கள் குறித்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.