close
Choose your channels

தலைகீழாக வொர்க்-அவுட் செய்யும் அஜித் படத்தில் அறிமுகமான நடிகை: வேற லெவல் வீடியோ!

Wednesday, October 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் படத்தில் அறிமுகமான நடிகை ஒருவர் தலைகீழாக வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வேற லெவல் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன

அஜித் நடித்த ’உன்னை தேடி’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா. அதன் பின்னர் அஜித்தின் ‘ஆனந்த பூங்காற்றே’, உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட மாளவிகாவுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பதும், திருமணத்திற்கு பின்னர் மும்பையில் செட்டிலாகி விட்ட மாளவிகா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படத்துடன் கூடிய போட்டோஷூட் உள்பட பல்வேறு புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் அவர் தலைகீழாக வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவுக்கும் புகைப்படங்களுக்கும் ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.