close
Choose your channels

திரைக்கதையின் இலக்கணத்தையே மாற்றியது: அஜித் படம் குறித்து இயக்குனர் திரு!

Sunday, July 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் தேவயானி நடிப்பில் அகத்தியன் இயக்கத்தில் தேவா இசையில் தங்கர்பச்சான் ஒளிப்பதிவில் உருவான திரைப்படம் ’காதல் கோட்டை’. கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்திற்காக சிறந்த இயக்குனருக்காக தேசிய விருது அகத்தியன் அவர்களுக்கு கிடைத்தது என்பதும், தமிழ் சினிமா இயக்குனர் ஒருவர் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றது இதுதான் முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் இன்று இந்த படம் வெளியாகி 24 ஆண்டுகள் ஆனதை தற்போது அஜித் ரசிகர்கள் அதனைக் கொண்டாடி வருகின்றனர். காதல் கோட்டை குறித்த ஹேஷ்டேக்கும் சமூக வலைத்தளத்தில் டிரெண்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் திரு தனது சமூக வலைத்தளத்தில் ’காதல் கோட்டை’ திரைப்படம் குறித்து கூறிய போது ’நலம் நலம் அறிய ஆவல்’. இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் திரைக்கதை இலக்கணத்தையே மாற்றியது’ என்று கூறியுள்ளார். அவரது இந்த பதிவிற்கு அஜித் ரசிகர்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.