close
Choose your channels

அஜித்துக்கு அப்புக்குட்டி காட்டிய நன்றிக்கடன்

Friday, August 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'அழகர்சாமியின் குதிரை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் அப்புக்குட்டி அஜித் நடித்த வீரம்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் 'வீரம்' படத்தில் நடித்தபோது அஜித்துக்கு நெருக்கமானதால், அஜித் தனது சொந்த செலவில் அப்புக்குட்டிக்காக ஒரு போட்டோஷூட் நடத்தினார். அப்புக்குட்டியின் வித்தியாசமான தோற்றம் இந்த போட்டோஷூட்டில் வெளிப்பட்டது.
இந்நிலையில் தனக்கு உதவி செய்த அஜிதுக்கு நன்றிக்கடன் தெரிவிக்கும் விதமாக தற்போது அப்புக்குட்டி ஹீரோவாக நடித்து வரும் 'காகித கப்பல்' என்ற படத்தில் அஜித்தின் பெருமை குறித்த ஒரு பாடலில் நடித்துள்ளார்.
'அம்மா அப்பா குடும்பத்தை பாரு' என்று தொடங்கும் இந்த பாடலுக்கு அப்புக்குட்டிக்கு சாண்டி நடனப்பயிற்சி கொடுத்துள்ளார். விவேகா எழுதிய இந்த பாடல் முழுவதும் அஜித்தின் பெருமைகளை குறிப்பிடுவதால் இந்த பாடல் சூப்பர் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.சிவராமன் இயக்கும் இந்த படத்தில் அப்புக்குட்டி, டில்லிஜா, எம்.எஸ்.பாஸ்கர், பவர்ஸ்டார் சீனுவாசன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். பிரபல தயாரிப்பாளர் வி.ஏ.துரை இந்த படத்தை தயாரிக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.