close
Choose your channels

தளபதி விஜய் குறித்து அலிஷா அப்துலா: வைரலாகும் டுவிட்!

Tuesday, November 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் மோட்டார் பைக் ரேஸ் வீராங்கனை அலிஷா அப்துலா நடிகர் அஜித்துக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்பதும் இருவரும் பைக் ரேசர்கள் என்பது மட்டுமின்றி அலிஷாவின் தந்தையும் அஜித்தும் ஒரே மோட்டார் சைக்கிள் ரேஸில் பங்கு கொண்டனர் என்பதால் இருவரும் குடும்ப அளவில் நெருக்கமானவர்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அஜித் மட்டுமின்றி அலிஷா அப்துல்லாவின் குட்புக்கில் இடம்பெற்று இருப்பவர்களில் ஒருவர் தளபதி விஜய் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் விஜய் ரசிகர் ஒருவர் விஜய்யுடன் அலிஷா உள்ள புகைப்படத்தை பதிவு செய்திருந்த நிலையில் இந்த புகைப்படம் குறித்து கருத்து கூறிய அலிஷா, ‘என்னுடைய போனில் இருக்கும் மிகச்சிறந்த புகைப்படங்களில் ஒன்று’ என குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் நடித்த ’கில்லி’ திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது நடிகர் சாந்தனு தனது டுவிட்டர் பக்கத்தில் ’கில்லி’ படம் குறித்து ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தபோது அதனை ரீடுவீட் செய்த அலிஷா அப்துல்லா, ‘விஜய்! ..என்ன ஒரு ஹீரோ! என்ன ஒரு ஸ்டைல்! என்று குறிப்பிட்டு விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.