close
Choose your channels

அல்லு அர்ஜூனின் 'புஷ்பா 2' ரிலீஸ் எப்போது?

Saturday, January 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது என்பதும் இந்த படம் தமிழ் உள்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் மட்டும் ‘புஷ்பா’ படம் 350 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் இதனை அடுத்து ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் ‘புஷ்பா’ படத்தின் முதல் பாகத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ‘புஷ்பா’ இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்க இருப்பதாகவும் முதல் பாகத்தில் நடித்த அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் தவிர வேறு சில முக்கிய நடிகர்களும் இந்த இரண்டாம் பாகத்தில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் ‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி இந்த ஆண்டே ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் வசூலில் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.