close
Choose your channels

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் கேமிரா முன் வந்த மேக்னாராஜ்: வைரல் வீடியோ

Saturday, January 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கன்னட நடிகை மேக்னா ராஜின் கணவரும், கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதும் அதன் பின்னர் நடிகை மேக்னாராஜுக்கு அதே ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கணவரின் மறைவுக்கு பின் தனது மகன் ராயன் ராஜை கவனித்த வந்த மேக்னாராஜ், தற்போது மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார். கணவரின் மறைவுக்குப் பிறகு முதன்முதலாக ’டான்சிங் சாம்பியன்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் வீடியோவை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

டான்சிங் சாம்பியன் நிகழ்ச்சிக்காக மேக்னாராஜ் மேக்கப் போடும் காட்சிகளும், இந்த நிகழ்ச்சியின் குழுவினர் அவருக்கு வாழ்த்து கூறும் காட்சிகளும், டான்சிங் சாம்பியன் நிகழ்ச்சியில் ஜட்ஜாக கலந்து கொள்ளும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன. இதனை அடுத்து ரசிகர்களும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.