close
Choose your channels

நீண்ட இடைவெளிக்கு பின் அமலா நடித்த 'கணம்' படத்தின் டீசர்!

Wednesday, December 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல், ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த 80கள் மற்றும் 90களின் நாயகியான அமலா நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடித்த ’கணம்’ திரைப்படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்ஆர் பிரபு, பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரித்த இந்த படத்தில் சர்வானந்த், அமலா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார் என்பதும் சுஜித் சரங் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் ஸ்ரீதரன் சரங் படத்தொகுப்பு பணி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படம் ஒரு டைம் மிஷின் சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்டது என்பது இந்த படத்தின் ஒன்றரை நிமிட டீசரில் இருந்து தெரியவருகிறது. சர்வானந்த், ரமேஷ் திலக், சதீஷ் ஆகிய மூவரும் எதிர்காலத்திற்கு டைம் மெஷின் மூலம் சென்று நடப்பவற்றை பார்க்கும் ஒரு கதையம்சம் கொண்ட படமாக தெரிகிறது. ஏற்கனவே தமிழில் ஒருசில டைம் மிஷின் படங்கள் வெளிவந்துள்ள நிலையில் ‘கணம்’ எந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.