close
Choose your channels

அமலாபால் வெளியிட்ட விஜய்சேதுபதி பட போஸ்டர்!

Friday, June 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதியின் 33வது படம் குறித்த அறிவிப்பு இன்று காலை வெளிவந்த நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் முதல்முறையாக நடிகை அமலாபால் இணைந்து நடிக்கவுள்ள செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் 'விஜய்சேதுபதி 33' என்ற டைட்டிலுடன் கூடிய ஒரு புதிய போஸ்டரை சற்றுமுன் அமலாபால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய்சேதுபதி, அமலாபால் தோன்றும் இந்த அசத்தலான போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்சேதுபதி, அமலாபால் இருவரும் இசைக்கலைஞர்களாக நடிக்கவுள்ளதால் இந்த போஸ்டரும் இசைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

வெங்கடகிருஷ்ணா ரோகநாத் இயக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் பழனியில் தொடங்கியுள்ளது. நிவாஸ் பிரசன்னா இசையில் உருவாகும் இந்த படத்தை சந்திரா ஆர்ட்ஸ் இசக்கிதுரை தயாரிக்கவுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.