close
Choose your channels

ரூ.96,700 மதிப்புள்ள ஏசி வெறும் ரூ.5900: அமேசானில் ஆர்டர் செய்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Tuesday, July 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமேசான் இணையதளத்தில் ரூ.96,700 என்ற விலைக்கு விற்க வேண்டிய ஏசி ரூ.5900 என்ற விலைக்கு விற்பனை என அறிவித்துள்ளதை அடுத்து அந்த ஏசியை பலரும் ஆர்டர் செய்தனர். ஆனால் அவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி குறித்த தகவலை தற்போது பார்ப்போம்

அமேசான் இணையதளத்தில் ஆச்சரியத்தக்க தள்ளுபடி விலையில் பல பொருட்கள் விற்பனையாகும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் 1.8 டன் இன்வெர்ட்டர் ஏசி ரூ.96,700 என்ற மதிப்பு உள்ளது என்று குறிப்பிட்டு அந்த ஏசியின் விலை வெறும் ரூ.5900 எனவும் 94% தள்ளுபடி எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது

இந்த அபாரமான தள்ளுபடி விலையை பார்த்த அமேசான் பயனாளிகள் பலர் உடனடியாக அந்த ஏசியை வாங்குவதற்காக ஆர்டர் செய்தனர். இந்த நிலையில்தான் திடீரென அமேசான் தவறுதலாக ரூ.5900 என்ற விலையை குறிப்பிட்டு உள்ளது தெரிய வந்தது. ரூ.96,700 என்ற விலையுள்ள ஏசியை ரூ.5900 தள்ளுபடி செய்து விற்பனை விலை ரூ.90,800 என குறிப்பிடுவதற்கு பதிலாக விற்பனை விலை ரூ.5900 என ஏசியின் விலையை குறிப்பிட்டுள்ளது

இதனை அடுத்து அமேசான் இணையதளத்தில் விலை சரி செய்யப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே ரூ.5900 என்ற விலை இருந்தபோது ஆர்டர் செய்தவர்களுக்கு அந்த ஏசி கிடைக்குமா? அல்லது அமேசான் நிறுவனம் அந்த ஆர்டரை ரத்து செய்யமா? அல்லது மீதி பணத்தை கேட்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.