close
Choose your channels

விஜய்சேதுபதி-நயன்தாரா படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகல்?

Thursday, July 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் 'சயீரா நரசிம்ம ரெட்டி' என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. மேலும் இதே படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நமது மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அமிதாப்பச்சன், கிச்சா சுதீப், ஜெகபதிபாபு, தமன்னா, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் ஏ.ஆ.ரஹ்மான் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக அமித் திரிவேதி என்ற இசையமைப்பாளர் ஒப்பந்தமாகியிருப்பதாகவும் ஏற்கனவே இந்த படத்திற்காக அமித் ஒரு பாடலை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் பாலிவுட்டில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.;

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.