close
Choose your channels

'வேதாளம்' வெற்றிக்காக அஜீத்தின் ஆலய விசிட்

Saturday, November 7, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தன்னுடைய ஒவ்வொரு படத்தின் ரிலீஸுக்கு முன்னர் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசிப்பதை கடந்த சில வருடங்களாக ஒரு வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல் 'தல அஜீத்தும் தன்னுடைய 'வேதாளம்' படத்தின் வெற்றிக்காக திருப்பதிக்கு இன்று சென்றுள்ளார்.

ஏற்கனவே 'வீரம்' படத்தின் ரிலீஸுக்கு முன்னர் அஜீத்தும், இயக்குனர் சிவாவும் திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இன்று காலை அஜீத் திருப்பதி திருமலை சென்று சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.

'வேதாளம்' படத்திற்காக இரவுபகலாக அஜீத், சிவா உள்பட படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். அந்த உழைப்புக்குரிய பலன்களை வரும் தீபாவளி முதல் அறுவடை செய்யவுள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையானின் ஆசியும் படக்குழுவினர்களுக்கு இந்த தரிசனத்தின் மூலம் நிச்சயம் கிடைக்கும் என்பதே அனைவரின் நம்பிக்கையாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.