close
Choose your channels

கவுதம் மேனனுக்கு 'அன்புசெல்வன்' தயாரிப்பாளர் ரிலீஸ் செய்த வீடியோ!

Wednesday, November 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கௌதம் மேனன் நடிப்பில் வினோத் குமார் என்பவரது இயக்கத்தில் ‘அன்புசெல்வன்’ என்ற திரைப்படம் உருவாகி வருவதாக இன்று காலை திரையுலக பிரபலங்களின் ட்விட்டர் பக்கங்களில் விளம்பரம் வெளியானது.

இதனை அடுத்து ஊடகங்களில் இந்த செய்தி பரவிய நிலையில் திடீரென கௌதம் மேனன், தான் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் இந்த படத்தின் இயக்குனர் யார் என்று தனக்கு தெரியாது என்றும் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கௌதம் மேனனுக்கு பதிலளிக்கும் வகையில் ‘அன்புசெல்வன்’ திரைப்படத்தில் கௌதம் மேனன் நடித்த காட்சிகளின் வீடியோவை அந்த படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டார்.

இந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் சற்று முன்னர் கவுதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘அன்புசெல்வன்’ என்றால் அது ஒரே ஒருவர் மட்டுமே அதுதான் சூர்யா’ என்று பதிலளித்துள்ளார். இருப்பினும் இந்த முறை அவர் ‘அன்புசெல்வன்’ என்ற திரைப்படத்தில் தான் நடித்ததை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.