close
Choose your channels

பாத் டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல தமிழ் நடிகை!

Friday, January 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவிவருகிறது.

தமிழ் சினிமாவில் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே தனிவரவேற்பை பெற்றவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் பல திரைப்படங்களில் பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார். தொடர்ந்து இசையில் ஆர்வம் கொண்ட இவர் தனியிசை குழுக்களில் இணைந்தும் பாடிவருகிறார். மேலும் சமூகவலைத்தளப் பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இயங்கிவரும் ஆண்ட்ரியா தனது சுற்றுலா புகைப்படங்களை அவ்வபோது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் நடிகை ஆண்ட்ரியா குளியல் டப்பில் இருந்தபடி சில புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். சோப் நுரைகளுக்கு மத்தியில் ஜொலிக்கும் இவர் அவர் அந்த நுரையை அள்ளி விளையாடுகிறார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேறலெவல் கமெண்ட்ஸ்களோடு வைரலாகி வருகிறது.

சமீபத்தில் வெளியான “அரண்மனை3“ படத்தில் நடித்திருந்த நடிகை ஆண்ட்ரியா தற்போது இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் “பிசாசு2“ திரைப்படத்தில் நடித்துவருகிறார். அதேபோல தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் கடல்கன்னியாக நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.