close
Choose your channels

அனுராக் காஷ்யப் இயக்கும் தமிழ்ப்படம்.. ஹீரோ இந்த பிரபல நடிகரா?

Friday, December 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் முதல் முதலாக ஒரு தமிழ் திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த படத்தில் தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஏற்கனவே நயன்தாரா நடித்த ’இமைக்கா நொடிகள்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ’லியோ’ திரைப்படத்தில் கூட ஒரு சிறு கேரக்டரில் அவர் நடித்திருந்தார்.

இந்த நிலையில் பாலிவுட் திரைப்படங்களை மட்டுமே இயக்கி வந்த அனுராக் காஷ்யப் தற்போது முதல் முதலாக ஒரு தமிழ் திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தை பான் இந்தியா திரைப்படமாக உருவாக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அனுராக் காஷ்யப் இயக்கிய வெப் தொடரில் ஜிவி பிரகாஷ் இசையமைத்த நிலையில் தற்போது அவரது இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.