close
Choose your channels

புது வரலாற்றுப் சாதனை படைத்த ஆப்பிள் நிறுவனம்!

Wednesday, January 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐபோன், ஐபேட் போன்ற மின்னணு சாதனங்கள் உற்பத்தில் முதலிடம் வகித்துவரும் ஆப்பிள் நிறுவனம் உலகில் முதல் முறையாக பங்கு சந்தை மதிப்பீட்டில் 3 டிரில்லியன் அமெரிக்கன் டாலர் வரை உயர்ந்துள்ளது. இந்த மதிப்பை இதுவரை எந்தப் பொது நிறுவனங்களும் ஈட்டியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் நிறுவனர்களுள் ஒருவரும் அதன் தலைமை நிர்வாகியுமான ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஐபோனை அறிமுக்கப்படுத்தினார். இதனால் அந்நிறுவனத்தின் பங்குகள் 5,800% உயர்ந்து இமாலய வளர்ச்சியடைய ஆரம்பித்தது. இடையில் இந்த நிறுவனத்தின் பங்கு சந்தைகள் சற்று சரிவைச் சந்திக்கத் துவங்கின.

ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மடிக்கணி, ஐபோன், மேக் கணினி போன்றவற்றின் விற்பனை காரணமாக கடந்த 2018 இல் முதன்முதலாக 1 டிரில்லியன் அமெரிக்கன் டாலர் அளவிற்கு அதன் பங்கு சந்தை மதிப்பு உயர்ந்தது. தொடர்ந்து 2020 கொரோனா காலக்கட்டத்தில் ஆப்பிள் நிறுவனப் பொருட்களின் விற்பனை அதிகரித்தன் காரணமாக 2 டிரில்லியன் டாலர் அளவிற்கு இதன் சந்தை மதிப்பு உயர்ந்தது.

இதையடுத்து வெறும் 16 மாதம் கழித்து தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.5% உயர்ந்து 2.99% டிரில்லியன் சந்தை மதிப்பை அடைந்திருக்கிறது. இதனால் அசுர வளர்ச்சியடைந்த ஆப்பிளின் சந்தை மதிப்பு 3 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது. இந்திய மதிப்பில் இது ரூ.2.23.75,950 கோடி எனவும் கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை இந்திய மதிப்பில் ரூ.13,640 ஆகவும் உயர்ந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.