close
Choose your channels

'பீஸ்ட்' உடன் வெளியாகவிருந்த பிரபல நடிகர் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

Tuesday, February 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதே தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட பிரபல நடிகரின் திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’லால் சிங் சத்தா’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி பான் - இந்தியத் திரைப்படமாக அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அடுத்து தளபதி விஜய்யின் ’பீஸ்ட்’ வெளியாக இருந்த தேதியில் ’லால் சிங் சத்தா’ என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

எனவே தற்போதைய நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி தளபதி விஜய்யின் ’பீஸ்ட்’ மற்றும் யாஷ் நடித்த ‘கே.ஜி.எப் 2’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே இந்தியா முழுவதும் வெளியாகும் பான் - இந்தியா திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.