close
Choose your channels

ஓடிடியில் ஏ.ஆர்.ரஹ்மானின் '99 சாங்ஸ்”: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு

Tuesday, May 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் முதன்முதலாக கதை எழுதி தயாரித்த திரைப்படம் ‘99 சாங்ஸ்”. இந்த படத்திற்கு அவரே இசையமைத்து இருந்தார் என்பதும் இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி இந்த படம் தமிழ் தெலுங்கு இந்தி உள்பட பல மொழிகளில் ரிலீஸ் ஆனது. ஆனால் ஒருசில மாநிலங்களில் இந்த படம் ரிலீஸ் ஆன ஒரு சில நாட்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியில் இருந்தனர்

இந்த நிலையில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் சற்று முன் தனது ‘99 சாங்ஸ்” திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். நாளை மாலை 06.30 மணிக்கு ’99 சாங்ஸ் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.