close
Choose your channels

'நீங்கள் வெர்ஜினா'? ரசிகர் கேட்ட கேள்விக்கு ஸ்ருதிஹாசனின் பதிலடி..!

Friday, March 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஸ்ருதிஹாசனிடம் நீங்கள் வெர்ஜினா? என கேள்வி கேட்ட ரசிகருக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் என்பதும் இவர் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. சமீபத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுடன் இவர் நடித்த ’வீரசிம்ஹா ரெட்டி’ நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடிய ஸ்ருதிஹாசன் ரசிகர்களின் கேள்விக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்தார். அந்த வகையில் திடீரென ஒரு ரசிகர் ’நீங்கள் வெர்ஜினா? என கேட்டார். ஆனால் அவர் கேட்ட கேள்வியில் வெர்ஜின் என்பதற்கான ஸ்பெல்லிங் தவறாக இருந்தது. இதற்கு அதிரடியாக பதில் கொடுத்த ஸ்ருதிஹாசன் ’முதலில் வெர்ஜினுக்கு சரியான ஸ்பெல்லிங் தெரிந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார்.

அதேபோல் ’நீங்கள் மது அருந்துவீர்களா? உங்களுக்கு பிடித்த மதுவகை எது? என்ற கேள்விக்கு ’நான் கடந்த ஆறு வருடங்களாக மது இல்லாத வாழ்க்கையை கடைபிடித்து வருகிறேன், ஆனாலும் சில நேரங்களில் ஆல்கஹால் இல்லாத பீர் வகை மது அருந்துவேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இன்னொரு ரசிகர் என்னுடன் டேட் வருவீர்களா? என்று கேட்டதற்கு முடியாது என்று தெரிவித்துள்ளார். இது போன்ற இன்னும் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு ஸ்ருதிஹாசன் பதில் கொடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.