close
Choose your channels

அருள்நிதிக்கு கிடைத்த மிகப்பெரிய புரமோஷன்

Tuesday, October 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் மு.க.தமிழரசு அவர்களின் மகனுமான அருள்நிதி 'வம்சம்' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'மெளனகுரு', 'தகராறு', டிமாண்டி காலனி' உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ராதாமோகன் இயக்கத்தில் 'பிருந்தாவனம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு அருள்நிதிக்கும் கீர்த்தனாவுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் இன்று இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை மகிழ்ச்சியுடன் அவர் தனது சமூக வலத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
அருள்நிதிக்கு அவரது குடும்பத்தினர்களும், நண்பர்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் IndiaGlitz அருள்நிதி-கீர்த்தனா தம்பதிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.