close
Choose your channels

அருள்நிதி-ராதாமோகனின் 'பிருந்தாவனம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Tuesday, May 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'மொழி', 'அபியும் நானும்' உள்பட பல தரமான திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராதாமோகன் இயக்கி முடித்துள்ள அடுத்த படம் 'பிருந்தாவனம்'. கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் அருள்நிதி நடித்துள்ள இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து சமீபத்தில் சென்சாரில் 'யூ' சான்றிதழும் பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த படம் இம்மாதம் 26ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இதே தேதியில்தான் சமுத்திரக்கனியின் 'தொண்டன்' திரைப்படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அருள்நிதி, விவேக், தான்யா, செல்முருகன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். வான்சன் மூவீஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு விவேகானந்த் ஒளிப்பதிவும், ஜெய் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

கோலிவுட் திரையுலகில் தரமான படங்களை கொடுத்து வரும் ராதாமோகன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர்களின் 'பிருந்தாவனம்', மற்றும் 'தொண்டன்' ஆகிய இரு படங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.