close
Choose your channels

எஸ்பிபிக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை! அமெரிக்காவில் பிரபல பாடகிக்கு துயரம்

Tuesday, May 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் பிரபல பாடகர் எஸ்பி. பாலசுப்பிரமணியம் அமெரிக்காவுக்கு சென்றிருந்தபோது அவருடைய பாஸ்போர்ட், இசைக்குறிப்புகள் ஆகியவை ஒருசில முக்கிய பொருட்கள்ல் திருடப்பட்ட சம்பவம் அனைவரும் அறிந்ததே. கிட்டத்தட்ட அதே நிலைமை அதே அமெரிக்காவில் பிரபல பின்னணி பாடகிக்கும் தற்போது நேர்ந்துள்ளது.

பிரபல பாடகியும், பின்னணி குரல் கொடுப்பவருமான சின்மயி சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிக்கோ நகருக்கு ஒரு இசை பயணத்துக்காக சென்று இருந்தார். அங்குள்ள கார் பார்க்கிங் ஒன்றில் காரை நிறுத்திவிட்டு சில நிமிடங்கள் கழித்து மீண்டும் திரும்பியபோது தன்னுடைய கார் படுமோசமாக டேமேஜ் ஆகியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ஐந்து நிமிடங்கள் தன்னால் என்ன நடந்தது என்பதையே ஊகிக்க முடியாமல் அதிர்ச்சியில் மூழ்கியிருததாகவும், அதன்பின்னரே தனது காரில் இருந்த பொருட்கள் திருடப்பட்டதையும் அவர் உணர்ந்தாராம். இதுகுறித்து அவர் காவல்துறையினர்களிடம் தெரிவித்தபோது 'இங்கு காரில் திருடு போவது சர்வ சாதாரணம் என்று கூறியதை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளார். நல்லவேளையாக காரில் திருட முயன்ற பெண்ணை ஒருவர் அடையாளம் கண்டுள்ளார். அந்த பெண்ணுக்கு தலைமுடி சிவப்பாக இருக்கும் என்று கூறியதை அடுத்து அந்த பெண்ணை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.