close
Choose your channels

அரவிந்தசாமி-த்ரிஷாவின் 'சதுரங்க வேட்டை 2' டீசர் ரிலீஸ் தேதி

Thursday, August 10, 2017 • தமிழ் Comments

நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளிவந்த 'சதுரங்க வேட்டை' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றிருந்த நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகமான 'சதுரங்க வேட்டை 2' என்ற திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றங்களை செய்வதை மையமாகக் கொண்டு உருவாகி வந்தது. அரவிந்தசாமி, த்ரிஷா நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த படத்தின் நாயகி த்ரிஷா ஏற்கனவே தனது சமூக வலைத்தளத்தில் இன்னும் 48 மணி நேரங்களில் 'சதுரங்க வேட்டை 2' படத்தின் டீசர் வெளியாகும் என்று கூறியிருந்த நிலையில் இந்த படத்தின் டீசர் நாளை அதாவது ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் புதிய போஸ்டர் ஒன்றும் சற்றுமுன் சமூக இணையதளங்களில் வெளிவந்துள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர்  மனோபாலா தயாரித்து வரும் இந்த படத்தில் அரவிந்தசாமி, த்ரிஷா, பூர்ணா, நாசர், ராதாரவி, ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வருகின்றனர். வினோத் கதை திரைக்கதை எழுதியுள்ள இந்த படத்தை நிர்மல் குமார் இயக்கி வருகிறார். வெங்கடேஷ் ஒளிப்பதிவும், ராஜா சேதுபதி படத்தொகுப்பு பணிகளையும் செய்து வரும் இந்த படத்திற்கு அஸ்வமித்ரா என்பவர் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ரம்யா நம்பீசன் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz