close
Choose your channels

ஆர்யாவின் 'கடம்பன்' சென்சார் தகவல்கள்

Thursday, April 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளிவந்த படங்கள் திருப்தியான வெற்றியை பெறாத நிலையில் அவர் மலைபோல் நம்பியிருக்கும் ஒரே படம் 'கடம்பன்'. இந்த படத்திற்காக ஆர்யா தனது அதிகபட்ச உழைப்பை கொட்டியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் இந்த படம் இன்று சென்சார் செய்யப்பட்டது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதால் இந்த படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை வெகுவிரைவில் எதிர்பார்க்கலாம்.

ஆர்யா, கேதரின் தெரசா, மதுவந்தி, ஒய்.ஜி.மகேந்திரா, சூப்பர் சுப்பராயன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'மஞ்சப்பை' இயக்குனர் ராகவா இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் சதீஷ்குமார் ஒளிப்பதிவில், தேவா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக யுவன்ஷங்கர்ராஜா பாடிய 'ஒத்த பார்வையில்' என்ற பாடல் அனைத்து எப்.எம் வானொலிகளிலும் தொடர்ந்து ஒலித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.