close
Choose your channels

அதெலட்டிக் வீராங்கனை தனலட்சுமிக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த பரிசு

Wednesday, April 14, 2021 • தமிழ் Comments

பிரபல அதெலடிக் வீராங்கனை தனலட்சுமிக்கு சிவகார்த்திகேயன் பரிசு கொடுத்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது

சமீபத்தில் நடைபெற்ற தேசிய தடகளப் போட்டியில் திருச்சியை சேர்ந்த தனலட்சுமி என்ற கல்லூரி மாணவி பங்கு கொண்டார். அவர் 100 மீட்டர் தூரத்தை 11.39 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். இந்தியாவின் மிகச்சிறந்த ஓட்ட வீராங்கனையான ஹிமாதாஸ் சாதனையை இவர் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்தன

இந்த நிலையில் தனலட்சுமியை தொடர்பு கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாகவும் இதனை அடுத்து தனலட்சுமி அவரை நேரில் சந்தித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இதுகுறித்து தனலட்சுமி பேட்டி ஒன்றில் கூறியபோது, சிவகார்த்திகேயன் அண்ணன் அரிவித்ததாகவும் அதுமட்டுமின்றி வர்களை நேரில் சந்தித்தபோது தன்னுடைய சாதனைக்கு அவர் பாராட்டு தெதனக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் ஷூ பரிசு அளித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் தயங்காமல் கேளுங்கள், கண்டிப்பாக நான் செய்கிறேன் என்று சிவகார்த்திகேயன் அவர்கள் வாக்குறுதி அளித்தார் என்றும் தனலட்சுமி அந்த பேட்டியில் கூறியுள்ளார்

சிவகார்த்திகேயன் சத்தமில்லாமல் எத்தனையோ உதவிகள் செய்து கொண்டிருக்கும் நிலையில் அவற்றில் ஒன்று தனலட்சுமிக்கு அவர் செய்த உதவி என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz