close
Choose your channels

அட்லி அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்.. பூஜை வீடியோ வைரல்..!

Sunday, January 14, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அட்லி அடுத்த படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் பூஜை குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான ’தெறி’ என்ற திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக வெளியான நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது.

விஜய் நடித்த வேடத்தில் வருண் தவான் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி நடிக்க உள்ளனர். இந்த படத்தின் பூஜையில் இந்த பூஜையில் அட்லீ தனது மனைவி ப்ரியாவுடன் கலந்து கொண்டார். மேலும் வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி,

மேலும் பூஜை குறித்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு அட்லி பதிவு செய்துள்ளார். விரைவில் இந்த படத்தை டைட்டில் அறிவிக்கப்படும் என்றும் இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வருண் தவானின் 18வது படமாக உருவாகும் இந்த படத்தை அட்லியின் உதவியாளர் காலீஸ் இயக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.